முரண்பாடுகளுக்கு மத்தியில் கூடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வவுனியாவில் இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

வவுனியா – குருமன்காட்டில் உள்ள தனியார் விடுதியொன்றிவல் இந்த கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனம், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு, எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்வதற்கான வழிவகைகளை ஆராய்தல் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரியவருகிறது.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் தொடர்பில் வட மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான சீ.வி.கே.சிவஞானம், பல ஊடகங்களில் நாளை கூட்டத்தில் பிரளயங்கள், குளறுபடிகள் இடம்பெறும், முரண்பாடுகள் ஏற்படும் என சொல்கிறார்கள். அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை. சில விடயங்களை நாங்கள் பேசப் போகின்றோம், பேசுவோம் என குறிப்பிட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!