விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

??????????????????????????????????????????????????????????
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டதாக தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வரன் கூறியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதியரசரான விக்னேஸ்வரன் இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும், வடக்கு மாகாணத்தில் புத்தர் சிலைகள் தன்னிச்சையாக நிறுவப்படுவதாகக் கூறி விக்னேஸ்வரனும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) சட்டம் எண் 3 (1) இன் கீழ், 2007 இன் 56, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (1) (எச்) மற்றும் தண்டனைச் சட்டத்தின் 120 மற்றும் 290 (பி) பிரிவுகளின் கீழ் விக்னேஸ்வரன் தண்டனைக்குரிய குற்றங்களை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறும், கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!