விமான நிலையம் திறக்கப்படுமா? – பவித்ராவின் கருத்து

மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதிப்பதன் மூலம் நாட்டில் வாழும் மக்களை நாம் ஆபத்தில் தள்ள முடியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களை திறப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஆழமான விவாதிக்கப்பட்டது. நாட்டில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எமது முன்னுரிமை. மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதிப்பதன் மூலம் நாட்டில் வாழும் மக்களை நாம் ஆபத்தில் ஆழ்த்த முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இதுவரையில் சுமார் 26,000 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 58,000 பேர் நாடு திரும்ப எதிர்ப்பார்த்துள்ளனர். இலங்கையர்கள் மீளவும் திருப்பி அனுப்பப்படும் போது நாங்கள் சரியான திட்டத்தை கையாண்டு வருகிறோம். இலங்கையர்களை மீளவும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப தூதரகங்கள் மூலம் வெளிநாட்டு நாடுகளால் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்பி அனுப்புவதன் மூலம் இங்கு வசிக்கும் இலங்கையர்களை நாங்கள் ஆபத்தில் தள்ள முடியாது” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!