முன்னாள் போராளிகளை புறந்தள்ளுவது மனிதாபிமானமற்றது! – முதலமைச்சர்

போரில் பாதிக்கப்பட்டு பலவித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய ரீதியிலான பண்பான குடும்ப வாழ்க்கையை வாழும் உங்களைப் போன்றவர்கள் முன்னைய போராளிகளை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்தள்ளி வைப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பமாட்டாது என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதியின் முன்னிலையில் உரையாற்றும் போதே வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘அமைச்சர் சுவாமிநாதனின் இது குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையிட்டு நாங்கள் மிகவும் மன வருத்தம் அடைந்தோம். எமது மக்கள் பல்வேறு விதமான துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உட்பட்ட நிலையில் துன்பங்களை இதயத்தில் சுமந்தவாறு நடைப் பிணங்களாக நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!