இலங்கையின் சுகாதாரத்துறைக்கு பாராட்டு!!

இலங்கையின் சுகாதார சேவையானது ஆசிய நாடுகளில் மாத்திரமன்றி உலகலாவிய ரீதியில் தரம் வாய்ந்தது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரோஸ் அதநொம் ஜெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இலவச சுகாதார சேவை தரமானதாக அமைந்துள்ளமையே இந்தத் தரத்துக்குக் காரணம். சுகாதார சேவைக்கு தெளிவான வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.

இலங்கை குறை வருமான நாடாக இருந்ததாலும் நாட்டில் இலவச சுகாதார சேவையானது தரமானதாக அமைந்துள்ளது. இது வளர்முக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!