குவைத்தில் இலங்கை பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை!

டுபாயில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 46 வயதான இலங்கை பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு, குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அமிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.

உடலில் வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் இருந்தமைக்கான தடையங்களுடன் குறித்த இலங்கை பணிப்பெண் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்ட போதிலும் சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த இலங்கை பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆய்வு செய்ய, சடலம் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!