பகிடிவதைகளை வேறு யாரும் மேற்கொண்டிருக்கலாம்! – துணைவேந்தர் தெரிவிப்பு.

யாழ். பல்கலைக்கழக வளாகத்துள் உடல்ரீதியான எந்த பகிடிவதையும் இடம்பெறவில்லை. இணையம் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதைகளை எமது பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி யாரும் செய்திருக்கலாம் என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார்.

“பகிடிவதைகள் தொடர்பில் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இணையம் மூலம் முறையிட முடியும். அவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அவர்கள் எமக்கு அனுப்பி வைப்பார்கள். அவற்றில் உடல்ரீதியானவை தொடர்பில் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இணைய ரீதியானது எனின் இணையக் குற்ற பொலிஸாராலேயே நடவடிக்கை எடுக்க முடியும். எமது பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது கூட இதனை மேற்கொண்டிருக்கலாம்.

எனினும், எமக்கு மானியங்கள் ஆணைக்குழுவால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனை நாம் இணையக் குற்ற பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்திருக்கிறோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!