இந்திய-இலங்கை பிரதமர்கள் பேசவுள்ளனர்!

பிரதமர் மகிந்த ராஜபக்சவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு இணையவழியில் இந்தப் பேச்சு நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர். குறிப்பாக இந்திய – இலங்கை உறவினை மேலும் வலுப்படுத்துவது, இந்திய மீனவர் அத்துமீறல் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பிரதமர் மகிந்த இந்திய இழுவைப்படகுகளால் வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைப்பார்.

இருநாட்டின் தலைவர்களின் பேர்சுவார்த்தைக்கு முதல் நாளான செப்ரெம்பர் 25 ஆம் திகதி வடக்கு மீனவர்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கல்துரையாடவுள்ளார். இதற்கான ஏற்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!