சசிகலாவை சந்திக்க மிதிவண்டியில் பயணம் மேற்கொண்ட தமிழர்: ஏன் தெரியுமா?

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை சந்திக்க தமிழகத்தை நபர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கு காரணமாக கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ளார். அதில், இந்த மாதம் சசிகலா விடுதலையாவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை, சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் விடுதலையாவார் என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதால், அவரின் வருகை தமிழத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டை பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல்.

50 வயது மதிக்கத்தக்க அ.ம.மு.க.,வின், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைத் தலைவரான, இவர், சசிகலாவை காண, திருச்செங்கோட்டில், கடந்த, 18-ஆம் திகதி சைக்கிள் பயணத்தை துவங்கினார். நாள்தோறும் அதிக பட்சம், 45 கி.மீற்றர் பயணம் செய்யும் வடிவேல், தமிழக எல்லையான ஓசூருக்கு, நேற்று மதியம் சென்றடைந்தார்.

இது குறித்து வடிவேலு கூறுகையில், சசிகலாவை சந்திக்க, அனுமதி கேட்டு, சிறை நிர்வாகத்திடம் கடிதம் வழங்குவேன். அனுமதி கிடைத்தால், அவரிடம், தாங்கள் வந்தால் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும். மக்களை, தங்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிப்பேன் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!