முகமாலையில் விடுதலைப் புலிகளின் பொருட்கள், மனித எலும்பு எச்சங்கள்!

கிளிநொச்சி – முகமாலை முன்னரங்காக இருந்த பகுதியில் உடல் எச்சங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள், சயனைட் குப்பிகள், இலக்கத் தகடுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் மே மாதத்துக்கு முன்னதாக கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட நிலையில் பல கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மீளவும் அகழ்வு பணி இடம்பெற்றிருந்த நிலையில் அகழ்வின்போது மண்டையோட்டு எச்சங்கள், எலும்பு எச்சங்கள், புலிகளின் சீருடை, சோதியா படையணியினுடையது என்று நம்பப்படும் த.வி.பு ஞா-188, த.வி.பு ஞா-308 இலக்கத் தகடுகள், புலிகளின் தலைவரது படம், சயினைட் குப்பி, கைக்குண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!