13 குறித்து மோடி அழுத்தம் கொடுக்கவில்லையாம்!

13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய பிரதமர் மோடி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்ததாக வெளியான தகவலை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுத்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கான நிதியை பெறுவது என்றால் 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய பிரதமரிடமிருந்து அழுத்தங்கள் வெளியாகின என வெளியாகும் செய்திகளை முற்றாக நிராகரிக்கிறோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி 13 வது திருத்தத்துடன் தொடர்புபட்டதில்லை.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில்13 பிளஸ் குறித்து பேச்சுக்கள் காணப்பட்டன. பரந்துபட்ட கருத்துப்பரிமாற்றங்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும். தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கப்போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!