கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் தீவிரமாகப் பரவும் பயங்கர நோய்.!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..!!

இலங்கையின் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு தொற்றுநோயின் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டெங்கு தொற்று அபாயநிலைக்கு செல்லாதபோதும் மழைக் காலமாகையால் எதிர்வரும் மாதங்களில் அது தீவிரமாவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் நுளம்புகள் பெருகாமல் இருக்கும் வகையில் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஜெயசேகர கோரியுள்ளார்.இலங்கையில் கடந்த ஜனவரி மாததில் இருந்து இதுவரை 27ஆயிரத்து 733 டெங்கு தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11,608 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் மேல்மாகாணத்தில் மாத்திரம் 8014 தொற்றாளிகள் உள்ளடங்கியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!