யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பிசிஆர் சோதனை!

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வந்த 9 மாணவர்களின் மாதிரிகள் நேற்று மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!