மீறுவோருக்கு 6 மாத சிறை! – வருகிறது வர்த்தமானி.

இன்னும் இரண்டு நாட்களில், புதிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, தெரிவித்துள்ளார். அதிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஆளாகுவர் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நாட்டின் மக்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்களை அமுல்படுத்த உள்ளது. சுகாதா​ர சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தொற்றுநோய் பரவல் காணப்படும் பகுதிகளில் உரிய சட்டதிட்டங்களை பின்பற்ற தவறுவோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையை வழங்கும் சட்டம் அமுல்படுத்த உள்ளது.

குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள், நோய்த் தன்மையை அறிந்துகொள்ள முன்வராதவர்கள், சமூக இடைவெளியை பேணத் தவறியவர்கள் ஆகியோருக்கு எதிராகவே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தச் சட்டங்களை மீறினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!