மீண்டும் ரியாஜ் குறித்து விசாரணை!

ரியாஜ் பதியுதீன் நியாயமான முறையில் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர் தொடர்பில் மீண்டும் விசாரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

இந்தநிலையில், ஈஸ்டர் குண்டுத் ​தாக்குதல் சந்தேகத்தின் பேரில், சுமார் ஐந்தரை மாத விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட ரியாஜ் பதியுதீன், ஜனதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, கடிதமொன்றை நேற்று எழுதியுள்ளார்.

“அரசியல் மற்றும் சமூகவாத காரணங்களால், என்னை மீண்டும் கைது செய்வதற்கான கோரிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன. அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடனேயே எப்போதும் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்கான நீதியைப் பெற்றுத்தருமாறு கோருகின்றேன்” என, அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!