சீன ராணுவத்திற்கு அதிபர் ஷீ ஜிங்பிங் போட்ட அதிரடி உத்தரவு: குழப்பத்தில் சகநாடு!

சீனா அதிபர் ஷீ ஜிங்பிங், எப்போதும் இராணுவம் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிரடி உத்தவிட்டுள்ளதால், இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சனை புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சனை சமீபகாலமாக தொடர்ந்து இருந்து கொண்ட வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களில் இந்த எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இரு படைகளுக்கு நேருக்கு நேர் கூட மோதிக்கொண்டன.

இதனால் இந்தியா மற்றும் சீன இராணுவ வீரர்கள் காயமடைந்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து, எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் இடையே, ஏழு சுற்று பேச்சு நடந்துள்ளது. கடைசியாக நடந்த பேச்சு வார்த்தையின் போது, படைகள் விலக்கிக் கொள்வது தொடர்பாக, ஆக்கப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீன அதிபர், ஷீ ஜிங்பிங், குவாங்க்டாங்க் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது வீரர்களிடம், நீங்கள் எப்போதும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். எப்போதும் விசுவாசமாகவும், நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என, ஜிங்பிங் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கடுத்த நாளே, படைகளை தயார் நிலையில் இ சீன அதிபர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!