அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு அழுத்தம் தொடரும்! – என்கிறார் தயான் ஜெயதிலக

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதால், இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் சாத்தியம் இல்லை என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள போதிலும் பேரவையில் அதன் செல்வாக்கு தொடரும். தமது சொந்த நலன்களை கருத்திற்கொண்டு பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. இலங்கைக்கு எதிராக யோசனையை முன்வைத்த அமெரிக்கா, விலகியமை காரணமாக இலங்கைக்கான அழுத்தங்கள் குறையும் என்ற கருத்து நிலவுகிறது.

எனினும் அது சாத்தியமில்லை, அமெரிக்கா இல்லாவிடினும் பிரித்தானியாவும் கனடாவும் இலங்கை மீது அழுத்தங்களை அமரிக்காவின் சார்பில் கொடுக்கக்கூடிய நிலை உள்ளது. அதுவும் பிரித்தானியாவிலும் கனடாவிலும் இன்று இலங்கை தமிழர்களின் வாக்குபலம் அதிகரித்திருப்பதால், அந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் இடத்தை நிரப்பக்கூடியன என்றும் தயான் ஜெயதிலக குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!