விமல் மக்களிடையே பிரச்சினையை தூண்டுகின்றார்- முஜுபுர் ரஹ்மான்

நஷ்டயீடு என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவதல்ல. நாட்டில் பாதிப்புக்குள்ளாகிய அனைத்து மக்களுக்கும் பாரபட்சிமின்றி வழங்கப்படுவதாகும் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முழு நாட்டு மக்களின் நலன் கருதியே பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் நஷ்டயீடு தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளார். இதனை புரிந்து கொள்ளமால் தனது தனிப்பட்ட எண்ணங்களை நிறைவேற்றி கொள்ள மக்களிடையில் பிரச்சினையை தூண்டும் வகையில் தவறான கருத்துக்களை விமல் வீரவன்ச முன்வைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வடக்கு தமிழ் மக்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் அல்ல. காலங்காலமாக சிங்களமக்களுடன் ஒன்றிணைந்து வாழ்பவரக்ள். அவர்களின் தேவைகளுக்கும் செவிதாழ்தத்துவது நல்லட்சி அரசாங்கத்தின் எண்ணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்நிப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் மக்கள் நிதியை விடுதலை புலிகளின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக விமல் வீரவன்ச போலியான பிரசாரங்களை செய்து வருகின்றார். பாராளுமன்றத்தில் விடுதலை புலிகளின் குடும்பங்களுக்கு அரசாங்கம் மக்கள் பணத்தை நஷ்டயீடாக வழங்கி வருகின்றது என விமல் வீரவன்ச குறிப்பிட்டடிருந்தார். இது நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நஷ்டயீட்டு தொகையினை அதிகரிக்குமாறு கோரியும் அவற்றை உரியமுறையில் மக்களுக்கு பெற்றுதரும்படியும் கோரி பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் நேற்று அமைச்சரவை பத்திரமொன்றினை சமர்ப்பித்திருந்தார். இதனை தவறாக அர்த்தப்படுத்தும் வகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

விமல் வீரவன்சவின் இவ்வாறான கருத்துக்கள் பொய்யானதாகும். மக்களிடம் பொய் கூறி தனது மனதில் உள்ள எண்ணங்களை நிறைவேற்றி கொள்ளவே முயற்சிக்கின்றார். அமைச்சர் சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனை போர் காலத்தில் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டு திட்டமல்ல.

இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே இந்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு சட்டமொன்று கொண்டுவரப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமமான நஷ்டயீடுகள் வழங்குதல் குறித்து வலியுருத்தப்பட்டுள்ளது. எனவே இது நாட்டில் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொறுந்த கூடியதாகும்.

அதேபோன்று கடந்த முப்பது வருடகால போர்சூழல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதன் விசாரணை முடிவில் பரிந்துரைகள் சில முன்வைக்கப்பட்டன. நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்திற்கான வழிகளை அந்த பரிந்துரைகள் காட்டியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டயீடு வழங்கும் போது சகல மக்களுக்கும் சமமான முறையில் நஷ்டயீடுகள் வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நல்லிணக்ககொள்கையினை நாட்டில் ஏற்படுத்தவே சுவாமிநாதன் இந்த சட்ட மூலத்தினை கொண்டுவந்திருந்தார். இதில் ஒரு குற்றமும் இல்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச புரிந்துசெயற்பட வேண்டும்.

வடக்கு மக்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் அல்ல. நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களும் அல்ல. இலங்கையில் பாரம்பரியமாக சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்பவர்கள். அவர்கள் மீண்டும் போர் சூழலை விரும்பவில்லை. நல்லிணக்கத்துடன் அனைவருடனும் ஒன்றிணைந்து வாழவே அவர்களின் எதிர்பார்ப்புக்களாக காணப்படுகின்றது. அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

விமல் வீரவன்ச தனது தனிப்பட்ட சில கொள்கைகைகளை நாட்டில் நிலைநாட்டிகொள்ள அரசாஙகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் குற்றம்சுமத்திகொண்டே வருகின்றார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தி அதனுடாக நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தி வடக்கு மக்களை மீண்டும் கொன்று குவித்து சிங்களவர்கள் தனியாகவும் தமிழர்களை தனியாக பிரித்து தனது ஆட்சியினை நிலைநாட்டி கொள்வதே அவரின் எண்ணபாடாக காணப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!