‘இனி இதுதான் உணவு’ – மியான்மரில் இரண்டாம் கட்ட ஊரடங்கால் மக்கள் அவதி!

மியான்மர் நாட்டில் கொரோனா ஊரடங்கால் வேலை மற்றும் வருவாயை இழந்த அப்பாவி மக்கள் தற்போது உணவுக்காக அல்லல் படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டின் புகழ்பெற்ற ரங்கூன் நகரம் உள்ளிட்ட முக்கிய பகுதி மக்களே தற்போது உணவுக்காக பாம்பு, எலி உட்பட உயிரினங்களை வேட்டையாடி வருகின்றனர். மியான்மரில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்த சில நாட்களிலேயே, அப்பாவி மக்கள் தங்களிடம் இருந்த நகைகள் மற்றும் தங்கத்தை அடகு வைத்து உணவுக்கான வழியை கண்டடைந்துள்ளனர்.

தற்போது, கடந்த செப்டம்பர் முதல் இரண்டாவது ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது. இப்போது பெரும்பாலான மக்கள், தங்களின் உடைகள் தொடங்கி வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை விற்று பசியாறியுள்ளனர். ஆனால் விற்பதற்கும், அடகு வைப்பதற்கும் ஏதுமற்ற நிலையில், அப்பாவி மக்கள் பாம்பு, எலி உள்ளிட்ட உயிரினங்களை நாடியுள்ளனர். பொதுவாக மியான்மரில், எலிகள், ஊர்வன மற்றும் பூச்சிகளை பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களால் உண்ணப்படுகின்றன.

ஆனால் கொரோனா ஊரடங்கால், வருவாயை மொத்தமாக இழந்த நகரப்புற மக்களும், இதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 40,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு, இதுவரை சிகிச்சை பலனின்றி ஆயிரம் பேர்கள் மரணம் என தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவால் மோசமான பாதிப்புக்கு உள்ளான பகுதியாக மியான்மர் உள்ளது. மட்டுமின்றி, கொரோனா ஊரடங்கால், புழ்பெற்ற ரங்கூன் நகரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து, போதிய உதவி இன்றி அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

உள்ளூர் அதிகாரிகளால் சுமார் 40 சதவீத மக்களுக்கே உதவ முடிந்தது என கூறும் நிலையில், தொழிற்கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்க: விரக்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர் அரசின் ஒருவேளை உணவும் 15 டொலர் உதவித் தொகையும் அப்பாவி மக்களுக்கு போதுமானதாக இல்லை என்றே கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!