வெளியே செல்வது ஆபத்து; பொறுப்பாக செயற்பட அரசாங்க அதிபர் அறிவுறுத்து!

யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

“வெளியே போவது மிக ஆபத்தான விடயம். வடக்கில் தொற்று அதிகரிப்பதற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம். வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டும்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தற்காலிகமாக தமது வியாபாரத்தை நிறுத்தவேண்டும்” எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!