மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது, பொதுமக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நிவாரண செலவுகளுக்காக அரசாங்கத்தினால் 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மினுவாங்கொடை கொத்தணி ஊடாக நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவலடைவதைத் தொடர்ந்து, இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்ய தயாராகவுள்ளதாகவும் திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்கவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!