அடுத்த ஆண்டு முதல் 60 சதவீத விமானங்களை இயக்க உத்தரவு!

கொரோனா காரணமாக, அடுத்த ஆண்டு பிப்., 24ம் தேதி வரை, 60 சதவீத உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என, விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பால், நம் நாட்டில் மார்ச், 23 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மே, 25 முதல், 33 சதவீத உள்நாட்டு விமானங்கள் மட்டும், இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.ஜூன், 26ல் உள்நாட்டு விமானங்களை, 45 சதவீதமாக உயர்ந்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை, 60 சதவீதமாக உயர்த்தலாம் என, செப்., 2ம் தேதி அறிவித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், அதற்கான கால வரம்பை தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக கடந்த, 29ம் தேதி அமைச்சகம் சார்பில் விமான நிறுவனங்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கொரோனா பரவல் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்., 24ம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை, 60 சதவீத உள்நாட்டு பயணியர் விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும்’ என, கூறப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!