மினுவாங்கொடை கொத்தணி தொடர்பான விசாரணைகளில் சிக்கல் நிலை!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக மினுவாங்கொடை கொத்தணி தொடர்பான விசாரணைகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் அறிக்கையிடுமாறு சட்டமா அதிபர் நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி உருவான விதம் குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!