ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 150 பேர் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதியில் 21 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் 403 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!