தனிமைப்படுத்தல் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள விசேட நடைமுறைகள்!

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதித்து செயற்படுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனிமைப்படுத்தல் அல்லது lockdown என்பதன் அர்த்தம் எவருக்கும் அந்தப் பகுதிக்கு செல்லவோ வெளியேறவோ முடியாது என்பதாகும்.

இதுவே lockdown என்பதன் நோக்கமாகும். குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்க முடியும். ஆனால் அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்த முடியாது.

ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களையோ, தனிப்பட்ட வாகனங்களையோ நிறுத்த முடியாது.அத்துடன் குறித்த பகுதிகளில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அவ்வாறான பகுதிகளுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் என்பதன கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி இவற்றை மதித்து செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையில் 494 பொலிஸ் பிரிவுகள் உள்ளன. அவற்றில் 25 பொலிஸ் பிரிவுகளே locakdown செய்யப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!