கொரோனா நெருக்கடிக்கு பொதுமக்களும், ஊடகங்களுமே காரணமாம்!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பொதுமக்களும் ஊடகங்களுமே காரணம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து அதனை அரசாங்கம் கட்டுப்படுத்திய வேளை பொதுமக்களும் ஊடகங்களும தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறினர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே நாடு தற்போதைய நிலையை எதிர்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினருக்கு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திறன் உள்ளது. பொதுமக்களின் ஆதரவே அவசியம் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய் என்பது ஒரு சுகாதார நெருக்கடி மக்களை பாதுகாத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டியது அரசாங்கத்தினதும் சுகாதார துறையினரினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பு என தெரிவித்துள்ள ஜனாதிபதி நான் இலங்கையின் சுகாதாரதுறையிலும் மருத்துவதுறையிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன். இது உலகில் மிகச்சிறந்தது இலகுவாக இலக்கை அடையக்கூடியது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!