2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – முழுமையான தகவல்..!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பிரதமர் மற்றும் நிதிஅமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க்பட்டது.

இதன்படி, வரவு செலவு திட்ட யோசனைகள் வருமாறு…
புதிய தகவல்…

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறப்படப்படவுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு 2021 ஆண்டு டிசம்பர் 31 வரை 50 வீதம் வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது.

குரு கெதரா கல்வித் திட்டங்களை மாணவர்கள் பார்ப்பதற்காக கிராமப்புற பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்கென 3 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

கொரேனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளின் ஊழியர்களுக்காக புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஓய்வு பெற்ற, காயமடைந்த அல்லது உயிரிழந்த இராணுவ வீரர்களின் வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் முனைவோரின் தேவைகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இலங்கை இறையாண்மை பத்திரங்கள் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு இலாபம் மீதான வரி விலக்கு மூன்று ஆண்டுகளுக்கு அளிக்கப்படவுள்ளது.

தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்து தொடர்பாக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அத்துடன், வரி தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென விசேட மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

மேலும், தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளது.

அத்துடன், 2 ஆயிரத்து 500 மில்லியன் செலவில் பொது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ப்டவுள்ளது.

வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி அதிசொகுசு தொடர்மாடிக் குடியிருப்புகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

வங்கி, நிதி மற்றும் காப்புறுதி நிறுவனங்களைத் தவிர்ந்த ஏனைய மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்யும் வியாபார நிறுவனங்களின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள் 8 வீதத்தில் இருந்து மாற்றப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு எளிய முறையில் ஒன்லைன் மூலம் வருமான வரி செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு அடுத்து வரும் 5 ஆண்டுகளில் வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு, மதுபானம், சிகரெட், வாகனங்கள் மற்றும் பந்தயம் ஆகியவற்றுக்கு விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்பக் கல்லூரிகளில் வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்குத் தீர்மானம்.

அத்துடன், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 5 ஆண்கள் வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

மேலும், தொழில் நுட்பக் கல்வியைப் பெறும் மாணவர்களுக்கு மாதந்தம் 4 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானம்.

அத்துடன், சமூர்த்திப் பயனாளிகளுக்கு 7 வீத வட்டியின் அடிப்படையில் புதிய கடன் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 18 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை மேலதிகமாக ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், நிறைவேற்று அதிகாரமற்ற அரச அதிகாரிகளுக்கு கடமை நேரத்திற்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியை 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்யும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்காக 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்குத் தீர்மானம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!