கொழும்பை மூடாவிடின் பேரழிவு நிச்சயம்!

கொழும்பு மாநகரத்தை, மூன்று வார காலத்துக்கு முற்றாக மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு நகர சபை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

´கொரோனாவுடன் வாழ்வது என்பது கொரோனா இரண்டாம் அலையுடன் வாழ்வதென்று பொருட்படாது. கொரோனாவுடன் வாழ வேண்டும் என்றால் இரண்டாவது அலையை கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து நகரத்தை கடும் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து எவருக்கும் நகரத்தினுள் பிரவேசிப்பதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எவரும் வெளியேராத வகையில் கடும் நிர்வாகத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த வில்லை என்றால் ஒரு பெரிய பேரழிவுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

கொழும்பு நகர சபை எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை காப்பாற்ற முடியுமா என்பதும் இன்று ஒரு பிரச்சினையாகியுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எவ்வளவு கூறினாலும், குடிசைவாசிகளுக்கு அவ்வாறு செய்வது அவசியமற்றது. அவ்வாறு செய்வதாயின் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கடுமையான நிர்வாகத்தின் கீழ் செயற்பட வேண்டும். 14 அல்லது 21 நாள்கள் முடக்கி இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆபத்தான சூழலை எதிர்க்கொள்ள வேண்டியேற்படும்´ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!