சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 34 பேர் கைது!

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நேற்றைய நாளில் மாத்திரம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்களை கைது செய்யும் வகையில், சிவில் உடைகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!