உடலை தகனம் செய்ய அரசு 58 ஆயிரம் ரூபாய் கோருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு!

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த ஒருவரின் தகனச் செலவுக்காக அவரது குடும்பத்திடம் இருந்து 58,000 ரூபாவை அரசு பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவா் கேள்வி எழுப்பினார். அவரது கருத்துக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி,

“கொரோனாவால் உயிரிழப்போரின் குடும்பத்தினர் சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்கள் தங்களே சவப்பெட்டிகளை எடுக்க முடியும். அதற்கு பணத்தையும் அவர்கள் செலுத்தலாம் என்பது சாதாரண நடைமுறை. எனினும் இதில் குடும்பத்தினர் ஐதேனும் சிக்கல்களை எதிர்காண்டால் அரசு அதரவளிக்கும்” – என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!