மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வேண்டாம் என, வடக்கு கிழக்கு நீதிமன்றங்களினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீல விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முக்கியத்துவம் குறித்து, பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!