நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வரும் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தேர்தலுக்கு பிந்தைய அவரது நடவடிக்கைகளால் நாளுக்கு நாள் தமது செல்வாக்கை இழந்து வருகிறார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ளார். பொதுவாக தேர்தல் நாளுக்கும் ஒரு மாதம் முன்னரே புதிய ஜனாதிபதியிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணி துவங்கப்படும்.

ஆனால் இந்த முறை, ஜனாதிபதி டிரம்பின் ஆட்சியில், நீண்ட இழுபறிக்கு பின்னரே, புதிய ஜனாதிபதியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு வந்து 3 வாரங்களில் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் டிரம்பின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 46,000 பொதுமக்கள் டிரம்ப் டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி டிரம்புக்கு அவரது டுவிட்டர் கணக்கில் மொத்தம் 88.8 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

ஆனால் போலியான கணக்குகளை டுவிட்டர் நிர்வாகமே நீக்குவதாலையே இவ்வாறான சரிவு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, டுவிட்டர் கணக்கு பயன்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதிகளில் மிக அதிக போலியான அல்லது பொய்யான தகவல்களை டுவிட்டர் மூலம் பரப்பியவர் டிரம்ப் மட்டுமே எனவும் கூறப்படுகிறது.

இதனாலையே, பொய்யான தகவல் என்றால் எச்சரிக்கை செய்யும் ஒரு நிலைக்கு டுவிட்டர் நிர்வாகம் தள்ளப்பட்டது.

டிரம்ப் நாளுக்கும் தமது பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை இழந்து வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடன் தமது டுவிட்டர் கணக்கில் புதிதாக 130,000 பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

இருப்பினும் ஜோ பைடனை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மொத்தமாக வெறும் 19 மில்லியன் பேர்களே. இது அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பலமடங்கு எகிறலாம் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!