சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஆறு மாதங்கள் அனுவிக்கும் வகையில் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தேஞானசார தேரர் நேற்று ஹோமகம நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் ஹோமகம நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் தரப்பில், ஞானசார தேரருக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த நீதிவான், ஞானசார தேரரின் முடக்குமாறும் உத்தரவிட்டதுடன், அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!