கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இதன்படி, நாட்டில் நேற்று அடையாளங் காணப்பட்ட 496 கொரோனா தொற்றாளர்களில், பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் நேற்றையதினம் 167 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தின் புதுக்கடைப் பகுதியில் 44 பேருக்கும், கிரான்ஸ்பாஸ் பகுதியில் 14 பேருக்கும், நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் கொள்ளுப்பிட்டி கிருலப்பனை மற்றும் அவிஸ்ஸாவலை ஆகிய பகுதிகளில் இருந்து 4 பேர் வீதமும், மட்டக்குளி பகுதியிலிருந்து 6 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 56 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் வத்தளைப் பகுதியிலிருந்து 17 பேருக்கும், களனிய பகுதியில் இருந்து 10 பேருக்கும், ஹுனுப்பிட்டிய பகுதியிலிருந்து 09 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலிருந்து 53 பேரும், இரத்தினபுரி மற்றும் களுத்தறை மாவட்டங்களில் இருந்து 8 பேரும், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து பேர் வீதமும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன். பதுளை மாவட்டத்தில் இருந்து மூன்று பேரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 06 பேரும் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை. கொரொனா தொற்றைக் கண்டறிவதற்காக நாட்டில் நேற்றையதினம் 13 ஆயிரத்து 65 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!