வான் பாயும் கிளிநொச்சி குளங்கள்!

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் இன்று வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 19 அடியாக உயர்ந்துள்ளதுடன் கனகாம்பிகைக் குளத்தின் நீர் மட்டம் எட்டு அடியாகவும் அதிகரித்துள்ளது. பெரியகுளம் 4 அங்குலம் வரை வான்பாய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை, கனகாம்பிகைக் குளம் வான் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!