சிறையில் கண்கலங்கி நின்ற சசிகலா: வெளியான உண்மை தகவல்!

ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா சிறையில் கண்கலங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 வருடங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. அவரின் தோழி ஜெயலலிதா மறைந்தும் 4 ஆண்டுகள் ஓடிவிட்டன.

வரும் ஜனவரி மாதத்தில் சசிகலா விடுதலை ஆகவிருக்கும் நிலையில், நேற்று முன் தினம் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிறைக்குள் ஜெயலிதாவின் புகைப்படத்தை வைத்து, மலர்தூவி வணங்கி இருக்கிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் என்ற முறையில், சிறையில் இருந்த சக கைதிகளும் ஜெயலலிதா புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவிய சசிகலா, பத்து நிமிடங்களுக்கும் மேலாக தோழி உருவத்தை பார்த்து கண் கலங்கி நின்றிருந்திருக்கிறார்.

இதையடுத்து சக கைதிகள் சசிகலாவுக்கு ஆறுதல் கூறி தேற்றி அழைத்து சென்றிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!