வலிகாமத்தில் 73 பாடசாலைகளை மூட உத்தரவு!

லிகாமம் கல்வி வலயத்தில், 73 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்தில் 33 பாடசாலைகளும் தெல்லிப்பழை கல்விக் கோட்டத்தில் 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!