‘மத்திய அரசை கண்டித்து, இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

சில சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக கூறியுள்ளன. அவர்கள் எங்களுடன் இணைந்தவர்கள் அல்ல. எங்களுடைய போராட்டத்தை குலைக்க மத்திய அரசு சதி செய்கிறது. ‘மத்திய அரசை கண்டித்து, இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என, டில்லியில் போராடி வரும், விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதை ஏற்று, எழுத்துப்பூர்வமாக உறுதியளிப்பதாக, மத்திய அரசு கூறியுள்ளது. கோரிக்கைஆனால், சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில், விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.இந்நிலையில், 14ம் தேதியில் இருந்து, தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக, விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.

இது குறித்து, விவசாய சங்கங்களின் தலைவர்கள் நேற்று கூறியதாவது:சில சங்கங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கூறியுள்ளன. ஆனால், அவர்கள் எங்களுடன் இணைந்தவர்கள் அல்ல. எங்கள் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளோம். எங்களுடைய போராட்டங்களை குலைக்க மத்திய அரசு சதி செய்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.டில்லி எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், போராட்டத்தில் இணையத் துவங்கிஉள்ளனர்.விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் சிறைத் துறை டி.ஐ.ஜி., லக்மிந்தர் சிங் ஜாக்கர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.மணிப்பூரைச் சேர்ந்த, 9 வயது, சுற்றுச்சூழல் ஆர்வலர், லிக்பிரியா கஞ்சசம், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

‘விவசாயிகள் இல்லாவிட்டால், நமக்கு உணவு கிடையாது’ என, அவர் கூறியுள்ளார். டில்லி எல்லையில் போராடி வரும், விவசாயிகளின் குழந்தைகளையும், அவர் சந்தித்தார்.ஆலோசனைஇதற்கிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தகத் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ், பஞ்சாபைச் சேர்ந்த, பா.ஜ., நிர்வாகிகள் சிலர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

திரும்பப் பெறுங்கள்!முரட்டு பிடிவாதத்தை கைவிட்டு, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். டில்லியில் நடக்கும் விவசாயிகள் உண்ணாவிரதத்தில், நானும் பங்கேற்பேன்.-அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!