அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட செவிலியர்!

அமெரிக்க செவிலியர் ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தற்போது அமெரிக்க மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு இந்த தடுப்பு மருந்துகள் முதல் செலுத்தப்பட உள்ளன.இந்நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணியளவில் ஜியூயிஷ் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையின் அவசர பிரிவு செவிலியர் சான்ட்ரா லின்க்சே என்ற பெண் செவிலிக்கு தடுப்பு மருந்து முதலில் செலுத்தப்பட்டது.

அமெரிக்க மருத்துவ வரலாற்றில் இதன்மூலம் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க வரலாற்றில் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார்.சான்ட்ரா தடுப்பு மருந்தை செலுத்திக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைக் கண்டு அமெரிக்கர்கள் அனைவரும் அச்சப்படாமல் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்வார்கள் என அமெரிக்க அரசு நம்புகிறது. சான்ராவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!