எம்சிசி ஒப்பந்தத்தில் இருந்து தப்பியது இலங்கை!

480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவுன் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்ய முன்மொழியப்பட்ட அமெரிக்கவின் எம்சிசி ஒப்பந்தத்தை அமெரிக்கா இரத்து செய்துள்ளது.

இதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி கூடிய எம்சிசி பணிப்பாளர் குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (17) அமெரிக்க தூதரகத்தால் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டிருப்பினும் இலங்கைக்கான உதவிகள் தொடருமென தூதரகம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!