வடகொரியாவில் 100 பேர் முன்னிலையில் மரண தண்டனைக்கு ஆளான நபர்: என்ன செய்தார் தெரியுமா?..

வடகொரியாவில் மீன் பிடி கேப்டன் கடலில் இருக்கும் போது, வெளிநாட்டு வானொலியை கேட்டதற்காக, அவர் பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அத்ரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தனக்கு தவறு என்று தெரிந்தால், அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களை மிகவும் கொடூரமான முறையில் தண்டிப்பார். அவர்கள் இறுதியில் உயிருடன் இருக்கமாட்டார்கள். அது போன்று அவர் பல தண்டனைகள் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வடகொரியாவில் மீன் பிடி கேப்டன், கடலில் இருக்கும்போது வெளிநாட்டு வானொலியைக் கேட்டதற்காக பகிரங்கமாக மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தால் ஒளிபரப்பப்பட்ட Radio Free Asia என்ற ரேடிய வனொலியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டதை அவர் ஒப்புக் கொண்ட பின்னர் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 தொழிலாளர்கள் முன்னால், தூப்பாக்கி சூடு நடத்தியதன் மூலம் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடகொரியாவில் வெளிநாட்டு வனொலிகளை கேட்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி இவர் கேட்டதற்காக பொதுவெளியில் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

சோய் என்றழைக்கப்படும் 40 வயதான அந்த நபர், கடலுக்கு வெளியே இருக்கும் போது, குறித்து வனொலியின் செய்தி ஒளிபரப்பு மற்றும் வனொலி நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டு வந்துள்ளார்.

வடகொரியாவின், வடக்கு ஹாம்ஜியோங் மாகாணத்தில் ஒரு அதிகாரி சோய் இராணுவத்தில் ரேடியோ ஆபரேட்டராக இருந்தபோது வெளிநாட்டு ஒளிபரப்புகளைக் கேட்கத் தொடங்கியதாக கூறியுள்ளார். இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்பு, சோய் அந்த பழக்கத்தை தொடங்கியுள்ளார்.

இது நாட்டில் கட்சிக்க எதிரான கீழ்ப்படிதல் என்ற குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டி மாகாண பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மீன்பிடித் தளத்தில் ஏற்பட்ட ஒடுக்குமுறை கட்சி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணிநீக்கம் செய்ய வழிவகுத்தது.

இதோடு மட்டுமின்றி, இவர் மற்ற 100 கேப்டன்கள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளர்கள், முன் பகிரங்கரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

கட்சி அதிகாரிகள், தளத்தின் நிர்வாகம் மற்றும் சோயை கடலில் வேலை செய்ய அனுமதித்த பாதுகாப்பு அதிகாரிகளை ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வட கொரியாவின் பெரும்பகுதிகளில் வெளிநாட்டு வானொலி நிலையங்களைப் பெற முடியும், ஆனால் அது கேட்கப்பதற்கு அங்கு கடுமையான கெடு பிடி இருக்கிறது.

Radio Free Asia வனொலி, அமெரிக்காவின் வாஷிடனில் இருக்கும் நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டு, சியோலில் ஒரு அலுவலகம் போடப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது நாள் ஒன்றிற்கு ஆறு மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது.

வடகொரியாவிலும் இது ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், அங்கு வெளிநாட்டு வனொலிகளை கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது, நினைவுகூரத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!