கோவிட்-19: உலகளவில் 17 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,71,56,255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,40,53,618 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,03,511 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,275 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 3,24,857,

இந்தியா – உயிரிழப்பு – 1,45,843

பிரேசில் – உயிரிழப்பு – 1,86,764

ரஷியா – உயிரிழப்பு – 50,858

பிரான்ஸ் – உயிரிழப்பு – 60,549

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!