நீதிவான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை : நீதி அமைச்சு!

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மேலும் 15 வருடங்கள் ஆகுமென நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைப்பதற்காக 8 ஆயிரம் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட உள்ளதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஒரு வருட காலத்திற்குள் புனர்வாழ்வளிப்பதற்கும் நீதி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!