புதுவகை கொரோனா வைரஸ் தொடர்பில் ரமேஷ் பத்திரன விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், அது தொடர்பில் விசேட கவனஞ் செலுத்தியுள்ளதாக, அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவிதுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் பிரித்தானியாவுக்கு பயணத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே, அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுகின்றன.நாட்டுக்கு உள்நுழைவதற்கு முன்னரும், நாட்டுக்கு வருகை தந்த பின்னரும் மேற்கொள்ளப்படுகின்ற PCR பரிசோதனையே மிக முக்கியமானதாகும். PCR பரிசோதனைகளின் அடிப்படையிர் இலங்கையில் அனுமதிக்கப்படவுள்ள சுற்றுலா பயணிகளை குழுவாக பயணிப்பதற்கே அனுமதி வழங்கப்படும்.அத்துடன் ஐரோப்பிய நாடுகள் தொடர்பில் குறிப்பாக இங்கிலாந்து குறித்து விசேட கவனஞ் செலுத்தியுள்ளோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!