புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் பிரித்தானியாவுக்கு ஜேர்மன் சுகாதாரத்துறை மந்திரி அறிவுரை!

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஜேர்மனியின் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இது பழைய கொரோனா வைரஸை விட் அதிக வேகமாக பரவுவதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இதனால், பிரித்தானியாவில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புவதாக ஜேர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை நமக்கு கிடைத்த தகவலின்படி, புதியவகை கொரோனா வைரஸ் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியில் (பைசர் தடுப்பூசி) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வகை கொரோனா வைரசையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!