தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா தொற்று – உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது…!

மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல் கைதிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரும் கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மெகசின் சிறைச்சாலையில் இதுவரை 80 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட கைதிகள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களில் 2 ஆயிரத்து 600 பேர் குணமடைந்துள்ளதாகவும், 901 கைதிகள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!