பிரான்சில் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் தங்களின் உயிரை விட்ட மூன்று பொலிசார்!

பிரான்சில் கணவரிடம் சிக்கி தவித்து வந்த பெண்ணை காப்பாற்ற சென்ற மூன்று பொலிசார் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்பான புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. பிரான்சின் Saint-Just பகுதிக்கு அருகிலுள்ள Puy-de-Dôme என்ற இடத்தில் இருந்து நேற்று(டிசம்பர் 23-ஆம் திகதி), கணவரால் கடும் சித்ரவதைக்குள்ளாவதாகவும், தன்னை வந்து காப்பாற்றும் படியும் பெண் ஒருவர் பொலிசாரிடம் உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரைக் காப்பாற்ற முயன்ற போது, அந்த பெண்ணின் கணவரால், மூன்று பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், தற்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள், Lt Cyrille Morel(45), Adjutant Rémi Dupuis(37) மற்றும் Brigadier Arno Mavel(21 ) என்பது தெரியவந்துள்ளது.

Saint-Just அருகே தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமத்தில், இருக்கும் பெண் ஒருவர் அதிகாலை 2.30 மணிக்கு பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

உதவிக்கு அங்கு சென்ற பொலிசாரை, குறித்த பெண்ணின் கணவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அதன் பின் தப்பிப்பதற்கு வீடு முழுவதும் தீயை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது பிரான்சில் நடந்த மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இறுதியில் அந்த பெண் விட்டில் இருந்து தப்பிவிட, அங்கிருந்து தப்பி ஓடிய கணவர் பல மணி நேரங்களுக்கு பின் சடலமாக பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவில்லை.

அவரிடம் இருந்த சில ஆயுதங்களை, சட்டபூர்வமாக அவர் வைத்திருந்துள்ளார். சிலவற்றை மட்டும் அவர் பதிவு செய்யவில்லை.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ஒரு பெண்ணை மீட்க சென்ற பொலிசார்களில் மூன்று பொலிசார் உயிரிழந்தனர். எங்களை பாதுகாக்க, அவர்கள் உயிருக்கு ஆபத்தான பகுதிகளில் செயல்படுகின்றனர். இவர்கள் எங்களின் ஹீரோக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!