கல்முனையில் ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா – பல பகுதிகள் முடக்கப்பட்டன!

கல்முனை செலான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள பிரதேசங்கள் நேற்றிரவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்று இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று கல்முனை பொதுச் சந்தை, கல்முனை பஸார்,கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை இணங்காண்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!