சுவிஸ் இளைஞனின் முதுகு பையில் இருந்த மூதாட்டியின் தலை: அதிர்ந்துபோன போலீசார்!

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் கொலை வழக்கு தொடர்பில் நாட்டைவிட்டு வெளியேற விதிக்கப்பட்ட குற்றவாளி, தமக்கு எதிரான தீர்ப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார். துர்காவ் மண்டலத்தின் Frauenfeld நகரில், அப்போது 19 வயதான இளைஞர் தமது சொந்த பாட்டியை கழுத்தை நெரித்ததுடன், கத்தியால் அவரை கொன்று, அவரது துண்டிக்கப்பட்ட தலையுடன் சூரிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சூரிச் விமான நிலையம் வழியாக ஸ்பெயின் நாட்டுக்கு தப்ப முயன்றதாகவே கூறப்படுகிறது. அவரது முதுகுப்பையில் இருந்தே துண்டிக்கப்பட்ட பாட்டியின் தலையை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மருத்துவ சோதனையில் குறித்த இளைஞர் உளவியல் பாதிப்பு கொண்டவர் என நிரூபணமானது.

இதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் மறுத்ததுடன், குறுகிய கால காவலுடன் அவரை 15 ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற்ற தீர்ப்பானது.

ஆனால், தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் தமக்கு எதிரான அந்த தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், நாட்டை விட்டு வெளியேற முடியாது என மேல்முறையீடு செய்துள்ளார்.

2015 முதல் மட்டுமே சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ள அந்த இளைஞருக்கு நண்பர்கள் எவரும் இல்லை என்பது மட்டுமல்ல, வேலையும் இல்லை.

இந்த நிலையில் இத்தாலியரான குறித்த இளைஞரை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் விதித்தது.

ஆனால் அந்த இளைஞர் சார்பாக மீண்டும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தற்போது இந்த வழக்கானது மண்டல உயர் நீதிமன்றத்தின் பார்வையில் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!