அரச சொத்துக்களை விற்பனை செய்வதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது : அமைச்சர் அநுர!

அரச சொத்துக்களை விற்பனை செய்வதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் அநுர பிரியதர்ஷனயாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிராமத்துடன் பேச்சு என்கிற வேலைத்திட்டத்தில் கிராம மக்களின் ஒத்துழைப்பு, ஆலோசனைப் பெற்று வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொண்டு கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென பிரதேச, கிராமிய, மாவட்ட ரீதியில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கிராமங்களிலுள்ள ஒரு இலட்சம் வீதிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

சொத்துக்களை விற்பனை செய்வதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது நட்டம் இன்றி இலாபம் ஈட்டுவதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு பெறப்படுகின்றது.

அதனை விற்பனை செய்வதாக திரிபுபடுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.

அவற்றில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அமைச்சர் அநுர பிரியதர்ஷனயாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!